Asianet News TamilAsianet News Tamil

பாலியல் சர்ச்சை: இவரா பாஜக வேட்பாளர்? குமுறும் மக்கள்!

பாலியல் சர்ச்சையில் சிக்கியவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Loksabha election 2024 BJP Thiruvallur candidate sexual controversy smp
Author
First Published Mar 23, 2024, 2:00 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டின் 19 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் பாமகவுக்கும், 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸுக்கும், 2 தொகுதிகள் அமமுகவுக்கும், ஒரு தொகுதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கும் (ஓபிஎஸ் அணி) ஒதுக்கப்பட்டுள்ளது. ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ், பச்சமுத்து, ஏசிஎஸ் ஆகியோரது கட்சி தாமரை சின்னத்தில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை தென் சென்னையிலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024: குஜராத் பாஜக வேட்பாளர்கள் விலகல்!

அந்த வகையில், திருவள்ளூர் (தனி) தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன்.பால கணபதி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவிடம் பொதுவெளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி புகார் ஒன்றையும் தெரிவித்திருந்தார்.

 

 

இந்த நிலையில், பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஒருவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி என்பவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவர் தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. அதில் பேசும் அவர், “பட்டியலினத்தவர்கள், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால், தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்.” எனப் பேசி இருந்தார். இது சர்ச்சையான நிலையில், நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர் மாற்றப்பட்டார். அந்த வகையில், பாலியல் சீண்டல் சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios