திருப்பூர்
திருப்பூரில், 68-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஆட்சியர் ஜெயந்தி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்தியாவின் 68-வது குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடாப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஆளுநர் இல்லாததால், சென்னையில் முதல்வர் பன்னீர் செல்வம் கொடியேற்றி காவல்துறையின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதேபோன்று, தமிகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் கொடியேற்றி காவல்துறையின் மரியாதை அணிவகுப்பை ஏற்றிக் கொள்கிறார்கள். மேலும், கலை நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைக்கின்றனர்.
திருப்பூரில், சிக்கண்ணா அரசு கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தேடியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். மேலும், பல்வேறு அரசு துறைச் சார்ந்தவர்களுக்கு 20 இலட்சத்து 40 ஆயிரத்துக்கான நலத் திட்டங்களை வழங்கினார்.
இதில், அதிகாரிகள் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு தங்களது மரியாதைச் செலுத்தினர்.
