வேலூர் அருகே 2 நாட்களாக பொது மக்களை அச்சுறுத்திவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் மலை பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியுள்ளது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனப்பகுதியில் 2 நாட்களாக பொது மக்களை அச்சுறுத்திவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவைக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், வனத்துறையினர் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனச்சரக அதிகாரி பரமசிவம் கூறும்போது,
சிறுத்தைப்புலி மலை அடிவார பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்கிறது. அது ஊருக்குள் நுழையவில்லை. வனத்துறையினர் முகாமிட்டு அந்த சிறுத்தைப்புலியை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம் என்றும், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.
