நீலகிரி அருகே கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் வறட்சி காரணமாக வன விலங்குகள் உணவுகளை தேடி கிராமங்களில் வருவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி சப்பன்தோடு என்ற பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான 50அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் சிறுத்தையும் அதனுடன் ஒரு குட்டியும் இருந்ததை கண்ட ராதாகிருஷ்ணன் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 12 மணிநேர போராட்டத்திற்கு பின் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி கிணற்றில் கிடக்கும் சிறுத்தை மற்றும் குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட குட்டி பூனை என்று தெரியவந்தது. இதையடுத்து, சிறுத்தையை கூண்டில் அடைத்த வனத்துறையினர் முதுமலை தெப்பக்காட்டில் கொண்டு சென்று விட்டனர்.