அடுத்த ஆண்டு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அடுத்த வெள்ளோட்டாம் பரப்பு அரசு பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் படித்த 1.80 லட்சம் பேருக்கு வேலை இல்லை, அதே போல இந்தியாவில் 80 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதனை மாற்றுகின்ற வகையில் வரும் மாதங்களில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.
அடுத்த ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு புதிய வண்ணம் யூனிபார்ம் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பாடப்புத்தகம் முதல் 14 பொருட்களையும் அரசு வழங்கும். அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் வரும் 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்விமுறையை பொறுத்தவரையில் கல்விக்காக தனியாக ஒரு சேனல் உருவாக்கப்படும். மேலும் நமது கல்வியில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கு குழு ஒன்று உருவாக்கப்படும். அனைவருக்கும் சிறந்த கல்வியை தரும் வகையில் அரசு ஆங்கில கல்வி வகுப்பறை கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 14, 2019, 11:11 AM IST