Land registration

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடைஉத்தரவை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் 'யானை' ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் முன்னரே சில உத்தரவுகளை நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம். 

ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின் கீழும் பத்திரப்பதிவு செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் 21.04.2017 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைப் பதிவுகள் சட்டவிரோதம் ஆகும் என்றும் அத்துடன் 09.09.206 முதல் 28.03.2017 இடையிலான அனைத்து பத்திரப்பதிவுகளும் சட்டவிரோதமே ஆகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். . இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பத்திர பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டதாகும்.


 மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பத்திரவு பதிவு செய்தவற்கான தடை தளர்த்தப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.