கௌசல்யாவின் மறுமணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்... மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி!
கௌசல்வியாவின் மறுமணத்தில் உடுமலை சங்கரின் பாட்டி மாலை எடுத்துக் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கௌசல்வியாவின் மறுமணத்தில் உடுமலை சங்கரின் பாட்டி மாலை எடுத்துக் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
உடுமலைப்பேட்டை அருகே கெளசல்யா சங்கர் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதியன்று, பட்டப்பகலில் உடுமலையில் வைத்து சங்கர் மற்றும் கெளசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி கெளசல்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று குணமடைந்தார்.
இதனையடுத்து சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை இழந்த கெளசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கணவர் சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் கௌவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை கல்யாணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது.
இதில் கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்து பறையிசை முழங்க கவுசல்யா - சக்தி தம்பதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் சக்தியுடன் சேர்ந்து கவுசல்யா பறையிசைத்தடி நடனமும் ஆடினார். இந்த திருமணம் சங்கரின் குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் நடைபெற்றது. சங்கரின் பாட்டி, மாலை எடுத்து கொடுத்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனந்த கண்ணீரோடு கவுசல்யாவுக்கும், சக்திக்கும் சங்கரின் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.