Asianet News TamilAsianet News Tamil

Bandh : மே 16 முதல் 21ம் தேதி வரை பந்த்.. வெளியான அதிரடி அறிவிப்பு.! இயல்பு வாழ்க்கை பாதிக்குமா ?

பின்னலாடை துறையில் முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி பஞ்சு விலையேற்றம் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக நூல் விலை உயர்ந்து வருகிறது. மாதந்தோறும் நூல் விலை அதிகரிப்பதால் புதிய ஆர்டர்களை எடுப்பதில் பின்னலாடை துறையினர் தயக்கம் காட்டி வருகிறார்கள். 

Knitting companies in Tirupur have announced a strike from May 16 due to rising yarn prices
Author
Tamilnadu, First Published May 3, 2022, 12:58 PM IST

மேலும் பையர்களும் திணறி வருகிறார்கள். நூற்பாலை சங்கத்தினர் மாதந்தோறும் 1-ந் தேதி நூல் விலையை அறிவிப்பது வழக்கம். இந்த நிலையில் அனைத்து நூல் விலையும் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் கிலோ ரூ.440-க்கு விற்பனை செய்யப்பட்ட நூல் நேற்று ரூ.480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது போல் ரகம் வாரியாக நூல்களின் விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 

இதனால் பின்னலாடை துறையினர் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சு விலையேற்றத்தை முக்கிய காரணமாக கூறி நூல் விலையை நூற்பாலைகள் உயர்த்தி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் பருத்தி பஞ்சுக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பருத்தி சீசன் தொடங்க இன்னும் 6 மாதங்கள் ஆகும். அதுவரை இருப்பில் உள்ள பஞ்சை வைத்தோ அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சை வைத்தோ நூற்பாலைகள் நூல் தயாரிக்க வேண்டும். 

Knitting companies in Tirupur have announced a strike from May 16 due to rising yarn prices

பஞ்சை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே நூற்பாலைகள் இயங்கும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜவுளித்துறையினர் கடந்த மாதம் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தனர். நூல் விலை அதிகரிப்பதாலும், பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் வெளிநாடுகளில் இருந்து பருத்தி பஞ்சை இறக்குமதி செய்யும்போது இறக்குமதிக்கான 11 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்தனர். மத்திய அரசும் இறக்குமதி வரியை வருகிற செப்டம்பர் மாதம் முடிய முழுவதுமாக நீக்கம் செய்து அறிவித்தது. 

இதற்கு ஜவுளித்துறையினர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இறக்குமதி வரி நீக்கத்தால் பெரிய அளவில் நூல் விலை குறையாது என்றும், எதிர்பார்த்த பலன் இருக்காது என்றும் பின்னலாடை துறையினர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நூல் விலை நேற்று ஒரே அடியாக கிலோவுக்கு ரூ.40 உயர்ந்துள்ளதை பின்னலாடை துறையினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நூற்பாலைகளின் அறிவிப்பை தங்களால் ஏற்க முடியாது. எனவே இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

புதிதாக ஆர்டர்கள் எடுப்பதை முற்றிலும் தவிர்க்கும் சூழலில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னலாடை தொழிலை நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. நூல் விலையேற்றம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பின்னலாடைத்துறை ஏற்றம் பெற நினைத்தாலும் நூல் விலை உயர்வு என்பது பின்னலாடை உற்பத்திக்கு பெரும் தடைக்கல்லாகவே அமைந்து வருகிறது. 

Knitting companies in Tirupur have announced a strike from May 16 due to rising yarn prices

உற்பத்தி நிறுத்தம் மற்றும் தொழிலாளர்கள் வேலையிழப்பு ஏற்படும் அபாயத்தை பின்னலாடைத்துறை நெருங்கி வருகிறது. இதனால் பனியன் தொழில்துறையினர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி திணறி வருகிறார்கள். நூல் விலை உயர்வு காரணமாக அதிர்ச்சியடைந்த பின்னலாடை தொழில் சங்கத்தினர் ஆறு நாட்களுக்கு பந்த் அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளளது. அதன்படி திருப்பூரில் வரும் மே16 முதல் மே21ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு !

இதையும் படிங்க : Gold Rate Today : அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்க விலை..அடேங்கப்பா.! இவ்வளவு தானா ?

Follow Us:
Download App:
  • android
  • ios