கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். கருணாநிதிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் அவர் விரைவில் நலம் பெறுவார் என மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றும் குறைந்து கொண்டே வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவரது வார்த்தைகளாலே நன்றி சொல்லுவார் என்றும் கூறினார். 

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் கடந்த வாரமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு வீட்டில் இருந்த படியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் திமுக தலைவர் இருந்து வருகிறார். வீட்டிலேயே மருத்துவமனைகள் இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அவரது உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள அரசியல் தலைவர் மற்றும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு தலைமகன் மு.க.அழகிரி வருகை தந்து, திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்றார்.  இந்நிலையில் தற்போது கருணாநிதி குறித்து மு.க.ஸ்டாலின் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். 

கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள நோய் தோற்றும் குறைந்துள்ளதாக கூறினார். விரைவில் அவர் வார்த்தைகளாலே நன்றி சொல்லுவார் என்று ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். அனைவரின் அக்கறையும் வாழ்த்துகளும் அவரை விரைவில் குணமடைய செய்யும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.