Asianet News TamilAsianet News Tamil

Kanimozhi : விரைவில் மத்தியில் ஆட்சி மாறும்.. பாஜகவிற்கு ஷாக் கொடுத்த கனிமொழி

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்துவிட்டது. இதனால் வாக்குறுதிகளை நிறவேற்ற முடியவில்லையென தெரிவித்த கனிமொழி, விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 

Kanimozhi said that there will be a change of government in the center soon kak
Author
First Published Jun 19, 2024, 9:41 AM IST | Last Updated Jun 19, 2024, 9:41 AM IST

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு 5லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.  கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம் பட்டியில் தொடங்கி திட்டங்குளம், விஜயாபுரி கரிசல்குளம், பாண்டவர்மங்கலம், கோவில்பட்டி நகரப் பகுதிகள், இனாம் மணியாச்சி மற்றும் நாலாட்டின்புதூரில் வாக்களித்த வாக்காளர்களுக்கு  கனிமொழி எம்பி நன்றி தெரிவித்து பேசுகையில்,

மகளிர் உரிமை தொகை விடுபட்ட மகளிருக்கு பரிசீலனை ‌ செய்து வழங்கப்படும்  என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். விரைவில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்ததா.? குறைந்ததா.? ஒரு கிலோ தக்காளி, இஞ்சி, பீன்ஸ், வெங்காயம் விலை என்ன.?

ஆட்சி மாறும்- வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும், வேலை நாட்கள் அதிகரிக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி வந்துவிட்டது. ஆகையால் வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 100 நாள் வேலை செய்ததற்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருவதால், சரியாக வேலையும், கொடுக்க முடியவில்லை ஊதியமும் கொடுக்க முடியவில்லை. எனவே ஒன்றியத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கூறினார். 

மக்களுக்கான உங்கள் அர்ப்பணிப்பு உயரத்திற்கு அழைத்து செல்லும்.. வீடியோ பதிவோடு ராகுலுக்கு ஸ்டாலின் வாழ்த்து

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios