Kamal thanks to technical artists of Viswaroobam 2!

நடிகர் கமல் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்ட கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அண்மை காலமாக நடிகர் கமல் ஹாசன், அரசியல் விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வந்தார். இதனால் கமலுக்கு எதிர் கருத்துக்களும், ஆதரவு கருத்துகளும் எழுந்தன. 

இந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கமல் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அமெரிக்கா சென்றிருந்த கமல், ரஜினி பிறந்த நாளுக்கும் அங்கிருந்தபடியே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். 

விஸ்வரூபம் 2 மற்றும் சபாஸ் நாயுடு பட வேலைகளில் மூழ்கி இருந்தார் கமல். இந்த இரு படங்களுக்குப் பிறகு, அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதற்காக பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், மறைந்த தனது சகோதரர் சந்திர ஹாசனையும் அவர் நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.