Tamil politician asks actor to join with them
”காவேரிக்காக தமிழகத்தின் குரல்” எனும் புதிய போராட்ட இயக்கம் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்திற்கு அனைத்து தமிழ் மாநில விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த பி.ஆர்.பாண்டியனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசனும் இந்த போராட்ட இயக்கத்திற்கு, தான் ஒரு சிறு கருவியாக செயல்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என வாக்களித்திருந்தார். அந்த வாக்கை நிறைவேற்றும் விதமாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், விஜயகாந்த், தமிழிசை செளந்தரராஜன், டிடிவி தினகரன் ஆகியோரை இந்த போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் கமலஹாசன்.
ரஜினி இன்னும் அரசியல் கட்சி எதுவும் தொடங்கவில்லை என்றாலும் , அவரின் அரசியல் பிரவேசம் உறுதி என்பது போன்ற வார்த்தைகளை அவர் கொடுத்திருக்கிறார். கமலஹாசன் ரஜினியையும் தங்களுடன் இணைந்து , இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்க அழைப்புவிடுக்க போவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் ரஜினியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
