அவசர அவசரமாக , கடலூரில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்....!!!
நாடா புயல் காரணமாக , கடலூர் துறைமுகத்தில் தற்போது, 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதாவது, நாளை அதிகாலை வேதாரண்யம் - கடலூர் இடையே , நாடா புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
மேலும், இதனால், கடலூரில் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.....இதனையொட்டி பேரிடர் மீட்பு குழுவினர் , கடலூருக்கு விரைந்து உள்ளனர்......
மேலும், நாகை, காரைக்காலில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....... .
