Justice Karnan tasted non veg food at absconding period

தடாலடி உத்தரவுகளால் சுப்ரீம் கோர்ட்டுக்கே சுளுக்கெடுத்தவர் நம்ம மாஜி நீதிபதி கர்ணன். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு ஒட்டு மொத்த தேசத்தையும் கொலையாய் கொன்னெடுத்த இந்த மனிதனை தலைதெறிக்க தப்பி ஓட வைத்தது சுப்ரீம் கோர்ட்.

சமீபத்தில் இவர் கோவையில் கைதானார். கோவை, சென்னை, கொல்கத்தா என 3 விமான நிலையங்களிலும் போலீஸ்டம் இவர் ஆடிய தாண்டவங்கள் ஏக பிரசித்தி.

இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும். கோவை மாசேகவுண்டம்பாளையத்தில் தனக்கு மிக நெருக்கமான உறவு முறை நபரின் மினி பங்களாவில்தான் இவர் தங்கியிருந்திருக்கிறார்.

ரெகுலர் பயன்பாடில்லாமல் உறவினர்கள் வந்தால் மட்டுமே அந்த வீடு திறக்கப்படுமாம். அந்த வகையில் தலைமறைவாய் வந்த நம்ம ஜட்ஜ் அய்யாவுக்காகவும் திறக்கப்பட்டது அந்த வீடு. கர்ணன் அங்கே தங்கியிருந்தபோது சக்திவேல் எனும் மேஸ்திரி, தான் வேலை செய்யும் காண்ட்ராக்டரான ராஜேந்திரனின் உத்தரவின் பேரில் கர்ணனுக்கு சாப்பாடுகளை தயார் பண்ணி கொடுத்து கவனித்திருக்கிறார்.

கர்ணன் அரெஸ்டுக்கு பின் வாய் திறந்திருக்கும் சக்திவேல் “ஜட்ஜ் அய்யா நல்லபடியா பேசுவாருங்க. என்கிட்ட தமிழ்ல பேசுவாரு ஆனா அவரு கூட இருந்த வக்கீல் சார்ட்ட இங்கிலீஸுல பேசுவாரு.

அசைவ உணவுன்னா அய்யாவுக்கு இஷ்டம். தலைக்கறி, குடல் கறி இதெல்லாம் அய்யாவுக்கு ரொம்ப பிடிச்சுது. கருவாட்டு குழம்பு வெச்சு கொடுத்தோம்னா கண்ணை மூடிக்கிட்டு ருசிச்சு சாப்பிடுவாருங்க.

நான் மத்தியானம் மட்டும்தான் என்னோட வீட்டுல இருந்து சமைச்சு எடுத்துட்டு போனேன். காலையிலேயும், நைட்டுலேயும் ஹோட்டல்ல வாங்கி கொடுத்துடுவேன்.

அவரப்போயி அரெஸ்டு பண்ணிட்டாங்களே! நேத்து மதியம் குடல் கறி கேட்டிருந்தார், சமைச்சு கொண்டாந்து கொடுத்தேன். தினமும் சமையலுக்கு கறி எடுக்கிறதாலே செலவு அதிகமா இருந்துச்சு. அந்த பணத்தை தர்றேன்னு சொல்லியிருந்தாரு. ஆனா அதுக்குள்ளே அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டாங்க. பாவம் ஜெயில்ல நல்ல சாப்பாடு கிடைக்குதோ என்னவோ!” என்று புலம்பித்தள்ளியிருக்கார்.

கறி எடுத்த செலவுக்காசு கிடைக்குதோ இல்லையோ, நம்ம ரிட்டயர்டு ஜட்ஜ் அய்யா கர்ணனோட குட்புக்ல நீங்க நிச்சயமா இருப்பீங்க சக்திவேல்! உங்கள மைண்டுல நிச்சயம் வெச்சுப்பார். அய்யா ஜாமீன்ல வந்ததும் உங்க வீட்டு சமையல்லதான் அவரு நெகிழணும்!