5 நிமிடத்தில் வேறு சேவைக்கு எப்படி மாறுவது தெரியுமா..?

 நாம் பயன்படுத்தும் மொபைல் நம்பருக்கு சரியாக டவர் கிடைக்கவில்லை என்றால்  அதனை மிக எளிதில் வேறு நிறுவன சேவைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இதில்,மொபைல் எண் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை...மொபைல் எண் மாற்றாமலேயே,ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றி கொள்ளலாம்.

குறிப்பாக தற்போது ஏர்செல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் டவர்  கிடைக்காமல் மிகவும் சிரமம்பட்டு வருகிறார்கள்...

கடந்த வாரம் திடீரென சேவை நிறுத்தப்பட்டதால்,வேறொரு சேவைக்கு மாற கூட   மாற இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்லையில் எப்படி வேறு சேவைக்கு மாறுவது என்பதை பார்க்கலாம்.....

ஏர்செல் வாடிக்கையாளர்கள்

முதலில் ஏர்செல் கஸ்டமர் நம்பருக்கு கால் பண்ணுங்க.....

தமிழில் விவரங்கள் அறிய 1 ஐ அழுத்தவும் என சொன்னவுடன்,உடனே  டயல்  பண்ணுங்க....

பிறகு,உங்கள் மொபைல் நம்பரை யுபிசிஐக-கு  ஜெனரேட் செய்வதற்கு,1 ஐ அழுத்தவும் என வாய்ஸ் வரும் ...

பின்னர்,நம்முடைய மொபைல் நம்பர் பதிவு செய்ய வேண்டும் அல்லது சிம் கார்டில்  உள்ள நம்பரில்,கடைசி 5 நம்பரை பதிவிட வேண்டும்....

குறிப்பு : 

முன்னதாகவே சிம் கார்டில் உள்ள நம்பரை குறித்து வைத்துகொண்டு,இதனை முயற்சி  செய்து பாருங்கள்..

மேலும்,பின்னர் கிடைக்கப்பெரும் யுபிசிஐ  நம்பரை குறித்து வைத்துகொண்டு,அருகில் உள்ள ஷோ ரூம் சென்று,இந்த யுபிசிஐ நம்பரை தெரிவித்து,தங்களுக்கு எந்த சேவைக்கு மாற வேண்டும் என விருப்பம் உள்ளதோ,அந்த சேவைக்கு    மாறிக்கொள்ளலாம்.