Julee in the film
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரை பிரபலங்களும் திரைக்கு அறிமுகமில்லாதவர்களும் கலந்து கொண்டனர். நடிகர்
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்டது.
இதில் ஆரவ், ரைசா, ஹரிஷ் கல்யாண், கணேஷ், வெங்கட்ராம், ஓவியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஹரிஷ் கல்யாணும் ரைசாவும் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றனர். ஒவ்வொருவரும் பட வேலைகளில் பிசியாக உள்ளனர். பட வாய்ப்பு குறித்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஜூலிக்கு மட்டும் பட வாய்ப்புகள் வரவில்லை. கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிலையில், நடிகர் விமலுடன் ஜூலி மணட்ககோலத்தில் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கல்யாண கோலத்தல் ஜூலி - விமல் படம் வெளியானதை அடுத்து ஜூலி, நடிகையாகி இருப்பது உறுதியாகி உள்ளது.
ஆனாலும், ஜூலி சினிமாவில் நடிப்பதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகையாகி விட வேண்டும் என்ற ஜூலியின் ஆர்வத்தைப்
பார்த்த அவரின் பெற்றோர் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
தற்போது சமூக வலைத்தளத்தில் ஜூலி - விமல் புகைப்படம் வெளியான நிலையில் அவர் நடிகையாகி உள்ளது உறுதியாகி உள்ளது. ஜூலி - விமல் படத்தை பார்த்த நெட்டிசன்களோ, ஜூலி படத்தில் நடிக்கிறாரா? என்ற ஆச்சரியத்தில் உள்ளனர்.
