judgement postpone on tasmac case
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளை அகற்றக்கோரிய வழக்கின் இறுதிவாதம் உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தஹி ஆஜரானார்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ரோத்தகரி, “ 500 தொலைவில் தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும் என்பதை குறைக்க வேண்டும்.நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடினால் 25,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். என்று வாதிட்டார்.

மதுவை விட மனித உயிர் மேலானது
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, மதுக்கடைகளை விட மனித உயிர் மேலானது . நெடுஞ்சாலைகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து அதிகரித்துள்ளது. மாநிலத்திற்கான வருவாய் பெருக்குவதற்கு மாற்று வழியை அரசு யோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில் இவ்வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
