Husband of famous actress jeyacuta suicide - will cause the financial crisis?

நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 70, 80-களில் ஹீரோயினாக நடித்து பெயர் பெற்றவர் ஜெயசுதா. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் தோழா படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

நிதின் கபூர் மேரா பட்டி சிர்ப், காஞ்சனா சீதா, கலிகாலம், ஹேண்ட்ஸ் அப் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவர் தயாரித்த படங்கள் பெரிதும் தோல்வியைத் தழுவியது. இதனால் நிதி நெருக்கடிக்கு நிதின் தள்ளப்பட்டதாகவும், அதனால் மனமுடைந்து இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நிதின் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.