ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது பேசிய வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என புகழேந்தி கூறியுள்ளார். 2016 டிசம்பர் 5 இன் சந்தேகங்கள் என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி மற்றும் பழ.நெடுமாறன், மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். 2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் புத்தகத்தை பழ.நெடுமாறன் வெளியிட அதை புகழேந்தி பெற்றுக்கொண்டார்.

அப்போது மேடையில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேசியதாவது;- நாடு போற்றும் அளவுக்கு நல்ல திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தின் நீதிபதி  இதுவரை  ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்காதது ஏன்? என அவர் கேள்வி ழுப்பியுள்ளார். ஜெயலலிதாவை கொல்ல இந்த பூமியில் எவரும் பிறக்கவில்லை. 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கூறி சசிகலாவை ஒழித்து விடலாம் என நினைத்தார்கள். ஆனால் அது ஒருபோதும் நிறைவேறாது. ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது பேசிய வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார். 

கர்நாடகாவில் ஆதிக்கத்தை செலுத்திய பா.ஜ.க. வினர் சட்டப்பேரவை தேர்தலில் தோற்றுபோனார்கள்.  அவர்கள் இந்தியா முழுவதும் தோற்றுகொண்டு வருகிறார்கள் என்றார். ஜெயலலிதாவை கொள்ளைகாரி என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.