முதலமைச்சர் ஜெயலலிதா,தனி வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு, எழுத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வீடு திரும்பும்போது, அவரது கையால் எழுதி அறிக்கை வெளியிடுவார் என கூறப்படுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலோ, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று முன்தினம் சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை முதல் அவருக்கு, பிசியோதெரபி நிபுணர் உடற்பயிற்சி அளித்தார்.
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விரல்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக அவர், எழுதும் பணியை தொடங்கியுள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில், முதலமைச்சர் ஜெயல்லிதா, வீடு திரும்ப இருக்கிறார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
