ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதனையடுத்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 25-ம் தேதி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் 3 மாத காலத்திற்குள் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

 

இதனையடுத்து முன்னாள் தலைமைச் செயலாளர், அப்பல்லோ மருத்துவர்கள், போலீஸ் உயரதிகாரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரிடம் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல் காரணமாக அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.