ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்த கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுக்கின்றன. 

உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் எனவும், 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் நம்ம கோபி பவுண்டேஷன் சார்பில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரியும், விவசாயிகளின் நிலையை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல தாரை தப்பட்டை உடன் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் கலந்து கொண்டனர்.