ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும்…மெரினாவில் போராட்டத்தைத் தொடரும் இளைஞர்கள்..
உச்சநீதிமன்ற விதித்த தடை காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாவில்லை. இதனால் கொதித்தெழுந்த இளைஞர்களும், மாணவர்களும் கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை மெரினாவில் வரலாறு வியக்கும் வகையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் இந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இவர்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பித்தது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அதில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க போலீசார் தடிய நடத்தின்ர்.ஆனாலும் 100 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர சட்டம் நேற்று சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓய்வுபெந்ந நீதிபதி ஹரி பரந்தாமன் போராட்டக்காரர்களிடையே பேசினார். அப்போது தமிழக சட்டப் பேரவையில் நிறைவற்றப்பட்ட சட்டம் குறித்து விளக்கமளித்த அவர் இது நிரந்தர சட்டம் தான் என்றும்,இது தொடர்பாக பின்னாளில் பிரச்சனை எழுந்தால், சட்டப்பூர்வமாக சந்திக்கலாம் என்றும் கூறினார்,
இதனையடுத்து மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால் ஒரு பிரிவினர் ஜில்லிக்கட்டுக்காக நிரந்தர சட்டம் இயற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
