கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கடலில் இறங்கி கைகோர்த்து போராடி வருகின்றனர். அவர்களை லத்தி இல்லாமல் சென்ற போலீசார் பேசி மீட்டு வருகின்றனர்.
போராட்டக்களத்தில் லட்சக்கணக்கில் இருந்த இளைஞர்கள் நேற்றிரவு முதல் கலிந்து செல்ல துவங்கினர். கலையாமல் இருந்த ஆயிரக்கணக்கானோரை போலீசார் வேண்டுகோள் விடுத்து கலைத்தனர்.

அதை கேட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலைந்தனர். மிச்சம் உள்ளவர்கள் கடலை நோக்கி கலைந்து சென்று உள்ளே கைகோர்த்து நின்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லத்தி இல்லாமல் சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உள்ள சில நூறு இளைஞர்கள் கடலில் இறங்கிவிடுவோம் என்று போலீசாரை மிரட்டி வருகின்றனர். சிலர் போலீசாருடன் அழுதபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
90 சதவிகிதம் பேர் கலைந்துவிட்ட நிலையில் 10 % போராட்டக்காரர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
