48 மணி நேரத்தை கடந்து சரியாக சாப்பிடாமல், தூங்காமல் இயற்கை உபாதைகளை கழிக்காமல், தான் சார்ந்த இனத்தின் உரிமைக்காக போராடி வருகின்றனர், தமிழக இளமபெண்கள் மற்றும் இளைஞர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

லட்சக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்துக்கு தோளோடு தோள் கொடுத்து ஆரம்பம் முதல் ஆதரவு கொடுத்து வருகிறார் பிரபல சினிமா நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ்.

கடந்த 2 நாட்களாக பேராட்டக்கார்ர்களோடு, எந்தவித ஆர்ப்பாட்டமும்இன்றி பீச் மணலில் அமர்ந்து, போராடி வந்தார் லாரனஸ்.

நேற்று தெலைக்ட்சிக்கு அளித்த பேட்டியில், இஙகு பேராட்டத்தில ஈடுபடும் இளைர்களுக்கு உணவு, குடிநிர் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறேன். தேவைப்பட்டால் லட்சம் இல்லை ஒரு கோடி ரூபாய் கொடுக்க தயராக இருக்கிறேன் என அதிரடியாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று, ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராகவ லாரன்ஸ், 2, 3 நாட்களை கடந்து போராட்டம் சென்று கொண்டு இருப்பது ஒரு எச்சரிக்கை மணி என்றார். இனி தமிழர்களின் உணர்வுகள மீது கை வைத்தால், இப்படி தான், தமிழகமே கொதித்து எழும் எனவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.