நத்தம் விஸ்வநாதனின் சொந்த ஊரிலேயே அவரை ஓட விட்ட பொது மக்கள்… போராட்டக்கார்கள் ஆவேசம்…
உச்ச நீதிமன்ற விதித்த தடை காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாவில்லை. இதனால் கொதித்தெழுந்த இளைஞர்களும், மாணவர்களும் கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் இந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இவர்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருவதால், அதன் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பித்தது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அதில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்தார்.அதன்படி இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஓபிஎஸ் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமான சட்டம் இயற்றாமல் நடத்த விட மாட்டோம் என அலங்காநல்லூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஓபிஎஸ் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டை ஓபிஎஸ் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் சொந்த ஊர் என்பதால் போராட்டக்காரர்களை சமாளித்து விடலாம் என நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஒரு குழுவினர் போராட்டக்கார்ர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர்.
அப்போது போராட்டக்காராகள் நத்தம் விஸ்வநாதன் குழுவினர் மீது தண்னீரை பீய்ச்சி அடித்தும், தண்னீர் பாக்கெட்டுகளை வீசி எறிந்தும் அவர்களை அந்த இடத்தைவிட்டு துரத்தி அடித்தனர்.
நத்தம் கோவில் பட்டியில் பெண்கள் மிகுந்த ஆவேசத்துடன் அவர்களை விரட்டி அடித்தனர்.
.
