உச்சநீதிமன்றமே தலையிடாத வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும். உச்சநீதி மன்ற தீர்ப்பு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை இல்லை என்று ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜ்சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் 

கிடைக்கும் கிடைக்காது என்ற நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இது போன்ற நிலையை அறிவித்துள்ளதே? 

அவங்க தீர்ப்பை உடனடியாக சொல்லவோ  தடையை நீக்கவோமுடியாதுன்னு சொல்லியிருக்காங்க, உச்சநீதிமன்றம் விசாரணை முடிந்து தீர்ப்புக்கு தயாரகும் நிலையில் இவர்கள் உடனடியாக தீர்ப்பை சொல்லுங்கள் என்பதால் இப்படி சொல்லியிருக்கிறார்கள். 

மத்திய அரசு , மாநில அரசு இதற்கான முயற்சி எடுத்து வருகிறது. அனைவரும் நல்ல தீர்ப்பு வரும் என அதன் தீர்ப்பு நல்ல படியாக வரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம். இந்த நிலையில் இது போன்ற நிலையில் மக்கள் இதை எப்படி ஏற்றுகொள்வார்கள் மக்களிடையே கொந்தளிப்பான நிலை உருவாகும் என்பது மத்திய மாநில அரசுகளுக்கு தெரியாதது அல்ல

உச்சநீதி மன்றம் மத்திய அரசு போட்ட சட்டப்படித்தான் தடை என்கிறார்கள் , மத்திய அரசு உச்சநீதி மன்றம் சொல்லட்டும் என்கிறார்கள். இருவரும் குழப்புகிறார்கள். அப்படியானால் எதுதான் உண்மை.

ஒரு வேலை கடந்த ஆண்டு காளைகள் பட்டியலில் இருந்து நீக்குகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்ட அடிப்படையில் இந்த தீர்ப்பு வரும் என்று நினைக்கிறேன்.அந்த சட்டத்தை தான் உச்சநீதிமன்றம் தடை போட்டது. அந்த சட்டம் சரியா தவறா என்றுதான் நீதிமன்றத்தில் சொல்ல போகிறார்கள் அது சரியாக வருமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் இதே நீதிமன்றம் தான் சட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே தீர்ப்பு நல்லபடியாக வரும் என்ற நம்பிக்கை இல்லை.

ஆகவே மத்திய அரசு தான் உறுதியான ஒரு சட்டத்தை இயற்றனும். நீதிமன்றம் யாராலும் தலையிட முடியாத ஒரு சட்டத்தை இயற்றணும். 

10 கோடி மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். 10 க்கோடி மக்களுக்கான சட்டத்தை இயற்ற வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் உச்சநீதிமன்றம் கூட தலையிட முடியாது.

அப்படி செய்யாவிட்டால் மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

 இதே உச்சநீதிமன்ற தீர்ப்பில் கர்நாடக தண்ணீர் தரவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய கர்நாடக மக்களை அரவணைத்து மென்மையாக அமைதிப்படுத்தியது. 

ஆனால் தமிழக போலீசார் , அரசு போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்துகிறார்கள். இதுதான் இன்றைய நிலை இவ்வாறு ஜல்லிக்கட்டு ஆதரவாளர் ராஜசேகர் தெரிவித்தார்.