ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இன்று அனுமதி கிடைக்கும் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போதுதான் தீர்ப்பை எழுதிக்கிட்டிருக்றோம்…பொங்கலுக்குள்ள தீர்ப்பு சொல்ல முடியாது அப்படின்னு உச்சநீதிமன்றம் கைவிரித்து விட்டது.

இதனால் தமிழக மக்கள் கொந்தளித்துப்போயுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கல்லுரி மாணவர்கள் இப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளதால் எங்கு பார்த்தாலும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

பெரும்பாலன தமிழர்கள் உச்சநீதிமன்றம் தடை விதித்தால் அதைமீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என உறுதியாக உள்ளனர். இதனை கடலுரில் நாம் தமிழர் கட்சி அரங்கேற்றியுள்ளது,

கடலுரை அடுத்த திருவந்திபுரத்தில் இன்று காலை சுமார் 3 மணி நேரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த எராளமான காளைகள் இந்த ஜல்லிக்கட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரகசியமாக நடைபெற்ற இந்த ஜல்லிகட்டுப் போட்டியில் மாடு பிடி வீரர்கள்  உற்சாகத்துடன் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். ஆனால் அங்கு திடீரென வந்த காவல்துறையினர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.