Itll be a permanent task smacked staff
திருவாரூர்
டாஸ்மாக் கடைகளை மூடியதும், அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்.
இதே போல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடப்படும் பட்சத்தில் அதனால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிரந்தர மாற்று பணி வழங்க வேண்டும்.
பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக டாஸ்மாக்கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்தனர்.
அறிவித்தது போலவே, நேற்று திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். இதில் மாநில செயலாளர் லெனின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது “டாஸ்மாக் ஊழியர்களின் பணியினை நிரந்தரம் செய்திட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டத்தை அமலாக்க வேண்டும்” என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். முழக்கங்களும் எழுப்பினர்.
