திருச்சி

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூல் செய்வதற்கு தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூல் செய்வதற்கு தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் "தீவிர வரி வசூல்" முகாமில் மார்ச் 1 முதல் 15 ஆம் தேதி வரை வரிகளை செலுத்தலாம்.

இதில் அனைத்து வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது வரி மற்றும் வரியில்லா இனம் தொடர்பான தொகையை செலுத்திக்கொள்ளலாம்.

இது தவிர   ‌h‌t‌t‌p‌s://‌t‌n‌u‌r​b​a‌n‌e‌p​a‌y.‌t‌n.‌g‌o‌v.‌i‌n   என்ற வலை தளத்தில் இணையதளம் மூலமும் வரியினங்களை செலுத்த முடியும்.  

மக்கள் உரிய வரியினங்களை முறையாக செலுத்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு ஒத்துழைக்க வேண்டும்" என்று அவர் கேட்டு கொண்டார்.