இந்தியாவின் 71வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோட்டைகொத்தளத்தில் தேசிய கொடியேற்றி, சிறப்புரையாற்றினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தேசிய கொடியேற்றினார். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார். பின்னர், தமிழக அரசின் விருதுகள் பல்வேறு துறையினருக்கு வழங்கப்பட்டன.

விழாவில் கலந்துகொள்ள திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் சுதந்திர தின விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிட்டன.

அரசு விழாவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எந்த எம்எல்ஏவும் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஒருவர் கூட இல்லாமல் தமிழக அரசின் சுதந்திர தின விழா இன்று நடந்து முடிந்தது.