கோவை அருகே, பழைய ரூபாய் நோட்டுக்கு கமிஷன் அடிப்படையில் புதிய நோட்டுக்களை மாற்றியதாக 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோபி செட்டிபாளையம் மொடக்குறிச்சி பகுதியில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து கமிஷன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டு பெற சிலர் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் மொடக்குறிச்சி அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். காரில் ரூ.36 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ.90 ஆயிரத்திற்கு நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. 

இதுபற்றி விசாரித்தபோது, பொள்ளாச்சியை சேர்ந்த மனோஜ் (36). சிவில் இன்ஜினியர். கோவை ஆலாந்துறையை சேர்ந்த சக்திவேல் (39). கோவை, பொள்ளாச்சியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார் என தெரியவந்தது. இவர்கள் ரூ.37 லட்சம் புதிய நோட்டுகளை கொடுத்தால் ரூ.50 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் கமிஷனாக கிடைக்கும் என்பதால் மாற்றியதாக தெரிவித்தனர். இதை யடுத்து 37 லட்சம் மற்றும் கூட்டாளிகள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.