அமைச்சர் விஜயபாஸ்கரை, வருமான வரித்துறை அதிகாரிகள்  120 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணித்து பொறிவைத்து பிடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மணல் மன்னன் சேகர் ரெட்டி கைது விவகாரத்தை தொடர்ந்தே, அமைச்சர் விஜயபாஸ்கரை குறி வைத்து வந்துள்ளது மத்திய அரசு.

அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்தபோதே, தமது அடியாட்கள் மூலம், அமைச்சர்கள் அனைவரையும் கண்காணித்து வந்துள்ளார் விஜயபாஸ்கர்.

அதை தொடர்ந்து, கூவத்தூரில் எம்.எல்.ஏ க்கள் சிறைபிடிக்கப்பட்டதிலும் முக்கிய பங்காற்றி, சசிகலா குடும்பத்தின் தளபதியாக மாறியுள்ளார் அவர்.

இந்த தகவல்களை எல்லாம், சேகர் ரெட்டியின் வாக்கு மூலம்  மற்றும் பன்னீர் வாயிலாக திரட்டி உள்ளது மத்திய அரசு. அத்துடன், சேகர் ரெட்டியின் மணல் குவாரிகளுக்கெல்லாம் விஜயபாஸ்கர் மறைமுக பார்ட்னர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் தங்கி 120 நாட்கள் தொடர்ந்து, விஜயபாஸ்கரின் தொடர்புகள், பணப்பரிமாற்ற மார்க்கங்கள் அனைத்தையும் ஆதாரங்களோடு திரட்டி, அவரிடமும் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர் வருமானவரி துறையினர்.

அதனால், சேகர் ரெட்டி மீதான வழக்குகள் அனைத்திலும், அமைச்சர் விஜயபாஸ்கரும் சிக்கி உள்ளார். அவருடன் டெல்டா மாவட்ட அமைச்சர் உள்பட 4 அமைச்சர்களும், தென்மாவட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் சிக்கி உள்ளனர்.

இதனால், எந்த நேரத்திலும் ரைடு வரலாம் என்ற அச்சத்தில் அமைச்சர்கள் பலருக்கு. நிற்காமல்  தொடர்ந்து லூஸ் மோஷன் ஆகிக்கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம்  வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று  ஆஜரான விஜயபாஸ்கரிடம், 5 மணிநேரத்திற்கு மேல் அதிகாரிகள்  துருவித் துருவி விசாரணை நடத்தி உள்ளனர்.

இதையடுத்து, சேகர் ரெட்டி உடனான பண பரிமாற்ற விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி  விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பதே லேட்டஸ்ட் தகவல்.