குடும்ப தகராறில் பிரிந்து சென்ற மனைவியை வரவழைக்க, தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குறுக்கபுரத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சிவக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சிவக்குமார், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், சித்ரா கோபித்து கொண்டு, சேலம் மாவட்டம் மல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் அவர் குழந்தைகள் இருவரையும் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை.

சித்ராவை வீட்டுக்கு வரும்படி மல்லூர் சென்று சிவக்குமார், அழைத்தபோது, வேலைக்கு செல்லாத உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது என சித்ரா கூறி அனுப்பி விட்டார்.

மனைவியின் இந்த செயலால் மனமுடைந்த கணவன் சிவகுமார் அதிகாலை தனது 2 குழந்தைகளுக்கும் எலி பவுடரை நீரில் கரைத்து கொடுத்து விட்டு, தானும் குடித்து மயங்கினார். சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர், 3 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு  பின், சிவக்குமார் மற்றும் 2 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

பைனான்சியரை நிர்வாணமாக்கி நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்துள்ளனர்...

திருவையாறு அருகே காரில் சென்ற பைனான்சியர், டிரைவரை  நிர்வாணமாக்கி 15 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 மர்மநபர்களை போலீசார்  தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாணயக்கார செட்டித்தெருவை  சேர்ந்தவர் ரமேஷ். கோவையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.  நேற்று அதிகாலை 3 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து கோவைக்கு காரில் ரமேஷ்  புறப்பட்டார். காரை  டிரைவர்  நவீன் ஓட்டினார். அதிகாலை 3.45  மணியளவில் திருவையாறு கடந்து சென்றது. அப்போது காரை யாரோ தட்டுவதுபோல் சத்தம் கேட்டது. இதனால், காரை நவீன் நிறுத்தினார். அங்கு ஒரே பைக்கில் வந்த 3 பேர்,  திடீரென வீச்சரிவாளுடன் நவீன், ரமேஷை  மிரட்டி அருகில் உள்ள வாழை தோப்புக்கு காரை  ஊட்டி சென்றுள்ளனர். கார் வாழை தோப்புக்குள் ரமேஷ், நவீன்  ஆகியோர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கியுள்ளனர்.

இதைதொடர்ந்து  அவர்களை நிர்வாணமாக செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் ரமேஷ்   அணிந்திருந்த 15 பவுன் நகை மற்றும் 3 செல்போனை பறித்து விட்டனர்.  அதுமட்டுமல்ல,   ரமேஷிடம் ஏடிஎம் கார்டை பறித்தனர். இதன்பின், 3 பேரும் பைக்கை அங்கேயே  நிறுத்திவிட்டு  நவீன், ரமேசை ஆடைகளை  போடசொல்லி காரில், திருவையாறு பேரூராட்சி அலுவலகம்  அருகே உள்ள ஏடிஎம்  மையத்துக்கு சென்றனர். அங்கு ரூ.1 லட்சத்தை எடுக்குமாறு மிரட்டி ரூ.1 லட்சத்தை எடுக்க வைத்துள்ளனர். அங்கிருந்து ஈச்சங்குறிச்சி அருகே உள்ள வாழை தோப்புக்கு காரில் சென்ற போது, `இன்னும் அரை மணி நேரத்துக்கு இங்கிருந்து  செல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர் மீறி சென்றாலோ, யாரிடமோ சொன்னாலோ 2 பேரின் நிர்வாண  படத்தையும் சமூக வலைதளங்களில் போட்டு விடுவோம்’ என்று 3 பேரும் மிரட்டினர். பின்னர்  தாங்கள் வந்த பைக்கில் 3 பேரும் தப்பி சென்றனர்.