if u didnt talk i will transfer ur husband to anothern place
"நீ பேசலேன்னா உன் புருசனுக்கு டிரான்ஸ்பர்தான்'- பெண் போலீசுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த டார்ச்சர்...!
தன்னிடம் காவல் ஆய்வாளர் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வதாக பெண் காவலர் ஒருவர் தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை கொடுத்த அட்லின் ரேபா சொல்லும் போது, 'எனது கணவர் அருள்ஜாக்சன் தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்துவருகிறார். காவல் நிலையத்தின் அருகிலேயே குடியிருந்து வருகிறோம்.
கடந்த 12-ம் தேதி வியாழக்கிழமை இரவில் 8.15 மணி அளவில் நான் கடைக்குப் போய்விட்டு நடந்து வந்தபோது, ஆய்வாளர் கஜேந்திரன் என்பவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, "நீங்க அருள் ஜாக்சன் மனைவியா?'' எனக் கேட்டார். அதற்கு நான், "ஆமாம்" என்றேன்.
ஆனால், "உன்னிடம் நிறைய பேசணும்" எனச் சொல்லி சிறிது தூரம் அழைத்து வந்தவர், "நீ அழகாய் இருக்கிறாய்'' என்றவர் தொடர்ந்து ஆபாசமாகப் பேசினார். என்னை வீட்டுக்குச் செல்ல விடாமல், 'உன் போன் நம்பரை கொடுத்திட்டுப் போ" என்றார். போன் நம்பர் கொடுக்க நான் மறுத்ததும், ``
என்னோட நம்பர் உன் புருசன் போன்ல இருக்கும். அதுல எடுத்து பேசு.உங்கிட்ட நிறைய பேசணும்.நீ பேசலேன்னா உன் புருசனைக் காடல்குடிக்கு மாத்திடுவேன்" என சொன்னார் என கூறினார்.
இது குறித்து ஆய்வாளர் கஜேந்திரனிடம் கேட்ட போது...
`காவலர் அருள் ஜாக்சன் சமீப காலமாக மது அருந்திவிட்டு சரியாக பணிக்கு வரவில்லை.
அவருக்கு பெண்களுடனான தொடர்பு இருப்பது குறித்தும் எச்சரித்தோம். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பியிடம் பரிந்துரைக்க வேண்டியது வரும் எனக் கூறினோம்.
இந்த விஷயத்தை அவரது மனைவியிடம்அவர்தெரிவித்து உள்ளார்.இதற்காக தான் அவரது மனைவி இது போன்று பொய் புகாரை தெரிவித்து உள்ளார் என கூறி உள்ளார்.
