நாமக்கல்

தமிழ்நாடு மாநிலத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் நாமக்கல்லில் நடத்திய மாவட்டப் பேரவைக் கூட்டத்தில், "ரேசன் கடை ஊழியர்களுக்கும் அரசு ஊதியம் வழங்க வேண்டும்" என்று தீர்மானிக்கப்பட்டது.

சங்கங்களில் நிர்வாகம் இல்லாமலும், தனி அலுவலர் நியமிக்கப்படாமலும் உள்ளது. எனவே, மத்திய கூட்டுறவு வங்கியிடம் சேமிப்புக் கணக்குத் தொடங்கி பயிர் மற்றும் விவசாய நகைக் கடன் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, பழைய நடைமுறையை பின்பற்ற அனுமதி அளிக்க வேண்டும்" போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாநில இணைச் செயலாளர் ஜெயப்பிரகாசம், மாவட்டப் பொருளாளர் காமராசர், இணைச் செயலாளர்கள் வெங்கடேசபெருமாள், இரத்தினம், போராட்டகுழுத் தலைவர் மணி, கிழக்கு மண்டலச் செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசியும், முழக்கங்களை எழுப்பியும் வலுசேர்த்தனர்.