G.R சுவாமிநாதன் போற வேகத்தை பார்த்தால் எனக்கு நிச்சயம் ஜெயில்தான்.. கோர்ட் வாசலில் ஓபனா பேசிய சவுக்கு சங்கர்

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் என் மீதான வழக்கை விசாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் அவர் என்னை சிறைக்கு அனுப்ப போகிறார் என்பதை என்னால்  யூகிக்க முடிகிறது என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். 
 

If I see the speed at which GR Swaminathan is going, I will definitely go to jail.

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் என் மீதான வழக்கை விசாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் அவர் என்னை சிறைக்கு அனுப்ப போகிறார் என்பதை என்னால்  யூகிக்க முடிகிறது என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். நீதிபதி மற்றும் நீதிமன்றங்கள் குறித்து விமர்சித்தது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் வழக்கு நடந்து வரும் நிலைகள் சவுக்கு சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

சவுக்கு சங்கர் சமூகம், அரசியல் உள்ளிட்டவைகள் குறித்து யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார், எந்த ஒன்றை குறித்தும்  விமர்சிக்கக் கூடிய நபராக சவுக்கு சங்கர்  அறியப்படுகிறார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர் நீதித்துறை குறித்து கடுமையாக விமர்சித்தார், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் ஜி.ஆர் சுவாமியாதன் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார், இந்நிலையில்தான் தாமாக முன்வந்து அவர்மீது வழக்கு பதிவு செய்ய மதுரைக்கிளை பதிவாளருக்கு  நாதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

If I see the speed at which GR Swaminathan is going, I will definitely go to jail.

மேலும் அந்த உத்தரவில் கடந்த சில மாதங்களாக நேர்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் தன்னை குறித்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை சவுக்கு சங்கர்  பேசிவருகிறார், தனி நபர்கள் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவை குறித்து கடுமையாக தாக்கி செயல்பட்டு வருகிறார், யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, மனுவை உரிய முறையில்  விசாரித்து அவர் மீதான 2 வழக்குகளை ரத்து செய்தபோது சவுக்கு சங்கர் அதை மிக மோசமாக விமர்சித்தார்.

தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு, ஆனால் மனதை காயப்படுத்தும் அவரது கருத்துக்கள் மூலம்  எனது நேர்மையை கேள்விக்குறியாக்கி உள்ளார் என அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே இந்நிலையில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர உத்தரவிடப்படுகிறது, வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டும்,  எனவே அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.  மேலும், இதுவரை சவுக்கு சங்கர் மீது வந்துள்ள புகார்கள் விவரங்கள் குறித்து, பிரமாண பத்திரமாக  தகுந்த அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார், அப்போது  உணவு இடைவேளையின்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பல அதிர்ச்சி தகவல்களை கூறினார். அதன் விவரம் பின்வருமாறு:-  ஏற்கனவே என் மீது உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக என் மீது குற்றச்சாட்டு என்ன? அந்த குற்றச்சாட்டுகளுக்காக ஆதாரங்கள் என்ன என்பதை எனக்கு தாக்கல் செய்யவேண்டும்,  மேலும் இது சம்பந்தமாக பதிலளிப்பதற்கு எனக்கு 8 வார காலம் அவகாசம் வேண்டும் என இன்று காலை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தேன்.

If I see the speed at which GR Swaminathan is going, I will definitely go to jail.

ஆனால் அந்த மனுவை வாங்கிய ஜி.ஆர் சுவாமிநாதன் உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் அதைப் படித்துப் பார்த்தனர். அப்போது ஜி.ஆர் சுவாமிநாதன் அவமதிப்பு வழக்குக்கு பதில் சொல்கிறீர்களா இல்லையா? என கேள்வி எழுப்பினார். அதற்காகத்தான் இந்த மெட்டீரியல்களை கேட்கிறேன் என நான் கூறினேன். அதற்கு அவர் மதியம்  ஒரு மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், இந்த வழக்கில் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் கூறினார்.

அதாவது, ரெட் பிக்ஸ் சேனலில் ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என நான் கூறியதுதான், அந்த ஒரு வார்த்தைக்காக தான் இந்த வழக்கு நடக்கிறது, நீதிபதி கூறியதைப் போலவே ஒரு மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது,  நான் சில கருத்துக்களை கூற வேண்டுமென்றேன்,  ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி நாங்கள் உங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப் போகிறோம் என்றார், இத்துறை குறித்து பேசிய சில பேட்டிகள் மற்றும் ஆதாரங்களை அவர்கள் அதில் பதிவு செய்தனர். அப்போது நான் சில தகவல்கள்லெல்லாம் எனக்கு வேண்டும் என நான் கூறினேன்.

If I see the speed at which GR Swaminathan is going, I will definitely go to jail.

ஆனால் அதற்கு அவர் அனுமதி அளிக்கவில்லை, நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த வழக்கில் காட்டும் ஆர்வத்தை பார்த்தால் அவர் இந்த வழக்கை நடத்தும் வேகத்தைப் பார்த்தால் நிச்சயம் அவர் என்னை சிறைக்கு அனுப்ப போகிறார் என்பது எனக்கு தெரிகிறது. ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கு நியாயமான வாய்ப்பு வழங்கி நீதிமன்றம் தயங்குகிறது. தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற அதிகாரத்தில் ஜி.ஆர் சுவாமிநாதன் நடந்து கொள்கிறார். இவ்வாறு சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios