Turtles : பெசன்ட் நகர் பீச்.. கடலுக்குள் அனுப்பப்பட்ட குட்டி ஆமைகள் - இவை டைனோசர் காலத்தை சேர்ந்ததாம்! வீடியோ!

Supriya Sahu IAS : ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் அர்ப்பணிப்புக்கு சான்றாக, ஒரு நிகழ்வு குறித்து IAS அதிகாரி சுப்ரியா சாஹு ஒரு பதிவினை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

IAS officer supriya sahu shared video of  Olive ridley turtle release in besant nagar beach ans

புதிதாக குஞ்சு பொரித்த ஆலிவ் ரிட்லீஸின் ஆமைகளின் நம்பமுடியாத பயணத்தை ஆவணப்படுத்தும் ஒரு வசீகரமான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். சென்னையில் உள்ள ஆமைகள் காப்பகத்தில், புதிதாக குஞ்சு பொரித்த ஆலிவ் ரிட்லி ஆமைகளை, தொழிலாளர்கள் மெதுவாக கடலில் விடுவதை அந்த வீடியோ காட்டுகிறது. 

இது குறித்து திருமதி சாஹு கூறுகையில், இந்த ஆமை இனம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் காலத்திற்கு முந்தையது என்று ஒரு ஆச்சர்ய தகவலை அளித்துள்ளார். சிறிய ஆமைக் குஞ்சுகளைப் பற்றிய மற்றொரு சுவாரசியமான உண்மையைப் பகிர்ந்து கொண்ட திருமதி சாஹு, இந்த குஞ்சுகள் தங்களுக்கு உள்ள "Egg Tooth"ஐ பயன்படுத்தி, தனது ஓட்டை உடைத்துத் திறக்கின்றன என்பதை தெளிவுபடுத்தினார். 

இயற்கையின் அதிசயம்... சேமித்து வைத்து கொண்டு வெட்டும் போது பம்பு செட் போல் தண்ணீரை பீச்சி அடித்த மரம்! வீடியோ

சுப்ரியா வெளியிட்ட பதிவில் "சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள எங்கள் வனத்துறை காப்பகத்தில் பொரிந்த ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பொரிப்பகத்தில் இருந்து கடலுக்குள் தங்களது முதல் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த குட்டி ஆமைக் குட்டிகளைப் பார்க்கும்போது எனக்கு மெய்சிலிர்க்கிறது". 

"இந்த ஆமை இனங்கள், சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலத்தைச் சேர்ந்தவை என்பதை உணர்ந்து கொள்வது ஒரு திகிலான உண்மை தான். இந்த துணிச்சலான குழந்தைகளைப் பற்றிய பல நம்பமுடியாத உண்மைகள், நம்மை ஆச்சர்யப்படவைக்கும். இந்த ஆமை முட்டைகள் பொதுவாக 45 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரித்து, முதலில் தலை வெளியே வரும்போது மணலைத் தோண்டிக் குஞ்சுகள் வெளிப்படும். 

"மேலும் கடலில் விடப்படும் போது நீந்துவதற்கும், அவை கடலில் பயணிப்பதற்கும் ஊட்டச் சத்துக்களை வழங்குவதற்காக அவற்றின் வயிற்றில் மஞ்சள் கருப் பை இயற்கையாகவே உள்ளது. உண்மையிலேயே இது இயற்கையின் அதிசயம் தான்" என்றார் அவர்.

Sand Substitute : மணலுக்கு மாற்று.. கட்டுமான துறையில் ஒரு புது புரட்சி.. சாதித்த இந்திய விஞ்ஞானிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios