i will fire myself if do not take action against DGP of Tamil Nadu
திருநெல்வேலி
தமிழக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி நவம்பர் 6-ஆம் தேதி தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் ஒருவர் ஆட்சியரிடத்தில் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
என திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில், ஏராளமான கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக ஆட்சியரிடத்தில் அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் சங்கரசுப்பிரமணியன்.
இவர், தமிழகத்தில் காவலர்களுக்கான நலச் சங்கம் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாராம். அதனால், இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்
இதுகுறித்து நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார், கடும் சோதனைக்கு பிறகு பாதுகாப்பு காவலாளர்கள் சங்கரசுப்பிரமணியனை உள்ளே அனுமதித்தனர்.
அவர் ஆட்சியரிடத்தில் அளித்த மனுவில் “எனக்கு மீண்டும் காவல்துறையில் பணி நியமனம் வழங்க வேண்டும். தமிழக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பினர் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, தோமையார் குளம், கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் நாட்டுப்படகு வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதியை மீறி விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதால் நாட்டுப்படகு மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால், மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகவே, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், அதிக திறனுடைய சீன மோட்டார்களை பயன்படுத்தி தொழில் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரித்திருந்தனர்.
