Asianet News TamilAsianet News Tamil

கணவனின் கழுத்தை காலால் மிதித்து கொன்ற கண்ணகி – பல கோடி சொத்துக்காக கள்ளக்காதலனுடன் வெறிச்செயல்

husband murdered-by-wife
Author
First Published Dec 4, 2016, 3:49 PM IST


தாம்பத்திய சுகம் தராத கணவனின் கழுத்தில் காலை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் ஜிம் மாஸ்டரையும் சிறையில் அடைத்தனர்.

சென்னை அண்ணாநகர் திருமங்கலம் சாந்தம் காலனியை சேர்ந்தவர் முகமதுஹபீஸ் (44). தொழிலதிபர். பில்டிங் என்ஜினியர். இவரது மனைவி  அனீஷ்பாத்திமா (33).  இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு முகமதுஹபீஸ் குடும்பத்துடன் சாப்பிட்டு தூங்கனார். அடுத்த நாள் அவர் படுக்கையில் இருந்து எழவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அனீஷ்பாத்திமா, உறவினர்களுக்கு போன் செய்து வரவழைத்தார். அவர்கள், படுக்கையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த முகமதுஹபீஸை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்ததாக கூறினர்.

தகவலறிந்து திருமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது, முகமதுஹபீஸின், அண்ணன் ஆதாம்மியான்கான் (50), தனது தம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இதனால் முகமதுஹபீஸ் உடலை  பிரேத பரிசோதனை செய்தனர். 

இந்நிலையில் முகமதுஹபீஸ் பிரேத பரிசோதனை அறிக்கை 3ம் தேதி போலீசாருக்கு கிடைத்தது. அதில், முகமதுஹபீஸ் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார், முகமதுஹபீசின் உறவினர்கள் மற்றும் அனீஸ்பாத்திமாவிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், கணவனின் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொலை செய்ததை பாத்திமா ஒப்புக் கொண்டார். அவர் அளித்த வாக்குமூலம் என போலீசார் கூறியதாவது:

எனக்கும், எனது கணவருக்கும்  11 வயது வித்தியாசம் இருந்தது. ஆனாலும் நான், பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்குள் எவ்வித உறவும் இல்லாமல் இருந்தது. மாதத்தில் ஒருநாள் கூட அவர் என்னுடன் தாம்பத்தியம் கொண்டது இல்லை. இதனால், நான் விரக்தியில் இருந்தேன்.

இதையடுத்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் உடற்பயிற்சி செய்வதற்காக கொரட்டூரில் உள்ள ஜிம்முக்கு சென்றேன். அங்கு  பயிற்சியாளராக கொரட்டூரை சோ்ந்த பிரேம்குமார் (33) இருந்தார். அவரது சுறுசுறுப்பும், உடற்பயிற்சியால் அவருக்கு இருந்த திடமான உடலை கண்டு நான் ஆச்சரியம்  அடைந்தேன். மேலும் அவரது அணுகுமுறை, பேச்சு நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நாளடைவில் எங்களுக்கு தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

எனவே, எனது கணவர் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்ற நேரத்தில், பிரேம்குமாரை எனது வீட்டுக்கு வரவழைத்து  தனிமையில் இருந்தோம். இந்த விஷயம் எனது கணவருக்கு தெரியவந்ததும், என்னை கண்டித்தார். இதையொட்டி எங்களுக்குள் தினமும் தகராறு இருந்து வந்தது. அப்போது, என்னை விவாகரத்து செய்வதாக கூறினார்.

எனது கணவர் முகமதுஹபீஸுக்கு சென்னையில் மட்டும் 2 கோடி சொத்துகளும், பலகோடி மதிப்பில் நெல்லையில் 10 வீடுகளும் உள்ளன. அனைத்தும் வாடகைக்கு விட்டுள்ளார். என்னை விவாகரத்து செய்துவிட்டால், அந்த சொத்துகள் கிடைக்காமல் போய்விடும் என  நினைத்த நான், பிரேம்குமாரிடம் இதுபற்றி கூறி திட்டம் தீட்டினேன்.

அப்போது, எங்கள் மதத்தில் சடலத்தை பிரேத பிரிசோதனை செய்ய ஒப்பு கொள்ள மாட்டார்கள். அதனால், அவரை கொலை செய்தால், தப்பிவிடலாம் என முடிவு செய்தோம்.
அதன்படி கடந்த 19ம் தேதி இரவு எனது கணவர் மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர், அவர் தூங்க சென்றார். உடனே நான், பிரேம்குமாருக்கு போன் செய்து வரவழைத்தேன்.

அங்கு அவர் வந்ததும், என் கணவர் எங்களை பார்த்துவிட்டார். இதனால் எங்கள்  இருவரிடம் தகராறு செய்தார். இதனால், ஆத்திரமடைந்த பிரேம்குமார் சரமாரியாக அடித்து கீழே தள்ளினார். நான், முகமதுஹபீஸிசின் கழுத்தில் காலை வைத்து மிதித்தேன். இதனால், அவரால் சத்தம்போட முடியாமல், மூச்சு திணறி இறந்தார்.

அவர் இறந்ததை உறுதி செய்ததும், சடலத்தை கட்டிலில் தூங்குவது போல் கிடத்திவிட்டு, நானும் தூங்கிவிட்டேன். அடுத்தநாள் காலையில் எதுவும் தெரியாதது போல், உறவினர்களுக்கு போன் செய்தேன். பிரேத பரிசோதனை நடக்காது என  நினைத்தோம். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என தெரிந்ததால், நான் சிக்கி கொண்டேன் என அனீஷ்பாத்திமா வாக்குமூலத்தில் தெரிவித்த தாக போலீசார் கூறினர்.

இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த பிரேம்குமாரையும் நேற்று காலை கைது செய்தனர். பின்னர்,  இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios