Husband kills wife Husband Sucide
மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.
சென்னை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு சரளா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். மோகன் - சரளா இருவரும் அப்பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்தி வந்தனர்.
மோகனின் சகோதரி, நேற்று இவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு அசைவம் சமைத்து போடுமாறு மனைவியிடம் மோகன் கூறியதாக தெரிகிறது. இதற்கு சரளமா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கிடையே பிரச்சனை எழுந்துள்ளது.
நேற்று இரவு, சரளாவின் கழுத்தை நெறித்து, மோகன் கீழே தள்ளிவிட்டதாக சொல்லப்படுகிறது. இரவு நேரம் என்பதால், அவர்கள் தூங்கச் சென்று விட்டனர். இன்று காலையில் எழுந்த மோகன் மனைவி சரளாவை எழுப்பினார். ஆனால் சரளா இறந்து போயிருப்பதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், மோகன், பாத்ரூமில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
