தேனி

தேனியில் தீக்குளித்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் தீயில் கருகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கு மூன்று நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த வெள்ளச்சாமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி இராமாயம்மாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தீக்குளித்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் தீயில் கருகி இறந்த சம்பவம் இந்தப் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.