How to set a penalty of Rs 100 crore collected jayalalitha

கடந்த 2015ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்பட 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, அனைவரையும் விடுதலை செய்தார்.
இதையடுத்து திமுக மற்றும் கர்நாடக அரசு, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றது. கடந்த 14ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட தண்டனையை உறுதி செய்தது.
இதற்கிடையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார்.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் ரூ.100 கோடியை எப்படி வசூல்செய்வது என கர்நாடக அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, கர்நாடக அரசு ரூ.100 கோடியை எப்படி வசூல்செய்வது என உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தது.