Asianet News TamilAsianet News Tamil

அது எப்படிங்க வங்கியில் மட்டும் பணமில்லை – கேட்டது மக்கள்…

how its-no-money-in-the-bank---heard-people
Author
First Published Jan 5, 2017, 9:33 AM IST


ரிஷிவந்தியம்,

வங்கியில் பணம் இல்லை என்றதால், பகண்டை கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்ட மக்கள் “கோடி கோடியா பணம் சிக்குது. அது எப்படிங்க வங்கியில் மட்டும் பணமில்லை” என்று கேள்வி கேட்டனர்.

ரிஷிவந்தியம் அருகே பகண்டைகூட்டுச் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் உள்ள தங்களது கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக நேற்று காலை 100–க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், தலைமை அலுவலகத்தில் இருந்து வங்கிக்கு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் பழைய 100, 50 ரூபாய் நோட்டுகள் ஆகியவை வரவில்லை.

இதனால், வங்கியில் தற்போது பணம் இருப்பு ஏதுமில்லை. எனவே, உங்களுக்கு பணம் தர முடியவில்லை என கூறியுள்ளனர்.

இதனைக் கண்டித்து பொது மக்கள் அங்குள்ள திருக்கோவிலூர் – சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் பகண்டைகூட்டுச் சாலைக்கு காவலாளர்கள் விரைந்துச் சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடி கோடியா பணம் சிக்குது. ஆனால், வங்கியில் மட்டும் பணம் இல்லை ென்ற்உ சொல்றீங்க என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்தனர். பின்னர், வங்கியில் இருந்து அனைவருக்கும் முறையாக பணம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் மக்களிடம் தெரிவித்தனர்.

இதையேற்று மக்கள் அங்கிருந்து, வருத்ததுடன் கலைந்துச் சென்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios