போலீசாருக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வந்த பிரபல திருடன் நீராவி முருகனை வளசரவாக்கம் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 


தமிழக போலீசாருக்கு தொடர்ந்து தொல்லையாக இருந்து வந்தவன் நீராவி முருகன். மூன்று கற்பழிப்பு வழக்குகள் , ஏராளமான திருட்டு , செயின்பறிப்பு என போலீசாருக்கு எப்போதும் தொல்லையாக இருந்தவன் நீராவி முருகன். பரங்கி மலை , ஆதம்பாக்கம் என பல ஸ்டேஷன்களில் இவன் மீது வழக்குகள் உண்டு.


கடந்த 2014 ஆம் ஆண்டு துரைப்பாக்கம் அருகே சாலையில் துணிச்சலாக ஒரு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றான் நீராவி முருகன். இதை மறைந்திருந்து வீடியோ எடுத்து போட்ட ஒரு பெண் மணி காரணமாக விவகாரம் வெளியில் வந்தது. 
பின்னர் போலீசார் அரும்பாடு பட்டு நீராவி முருகனை பிடித்தனர். பின்னர் அவனை குண்டர் சட்டத்திலும் கைது செய்தனர். இரண்டையும் ஒரு சேர அனுபவித்த நீராவி முருகன் சமீபத்தில் வெளியே வந்தான். 


வெளியே வந்த நீராவி முருகன் மீண்டும் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கைவரிசை காட்ட துவங்கினான். சென்னை வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் தொடர்ச்சியாக தனது வேலையை காண்பிக்க துவங்கினான் . வீடு புகுந்து கத்தி முனையில் பெண்களை மிரட்டி நகை பணத்தை பறித்து செல்வது அதிகரித்தது.


ஒரு வீட்டில் தன்னன்ந்தனியாக 42 இன்ச் கலர் டிவியையே பட்டபகலில் வெளியே தூக்கி வருவான். அவனும் அவனது கூட்டாளியும் கொள்ளையடிக்கும் அந்த காட்சி பதிவுகளை எடுத்த போலீசார் அதைவைத்து நோட்டீஸ் அடித்து ஒட்டினர். வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் எஸ்.ஐக்கள் விஜயன் , ஹரி , ராஜ் மோகன் கொண்ட குழு களத்தில் இறங்கியது.


இதை பார்த்து போலீசாருக்கு சவால் விடுக்கும் வண்ணம் மேலும் ஒரு திருட்டை நடத்தி காட்டினான். டிவி திருடிய வீட்டில் குற்றவாளிகள் போட்டோவை வைத்து அடையாளம் காட்ட சொல்லி கேட்ட போது அந்த வீட்டின் பெண்மணி நீராவிமுருகன் போட்டோவை காட்டியுள்ளார். 
இவன் ஜெயிலில் அல்லவா இருக்கிறான் என்று போலீசார் விசாரிக்க அப்போது தான் தெரிந்துள்ளது அவன் வெளியே வந்த விஷயம். நீராவி முருகன் மிகுந்த திறமை சாலி தனக்கு சொந்தமாக செல்போன் எதுவும் வைத்துகொள்ள மாட்டான். எந்த விஷயம என்றாலும் லேண்ட் லைன் போன் தான்.


அதனால் நீராவி முருகன் எங்கிருக்கிறான் என்பதில் போலீசாருக்கு சிக்கல் எழுந்தது. புழல் சிறையிலிருக்கும் அவனது கூட்டாளி ஒருவனை பிடித்து விசாரித்த போது தண்டையார் பேட்டையை சேர்ந்த கொலைக்குற்றவாளி சக்திவேல் எனபவனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக தான் விடுதலையானார்கள் என்று தகவல் சொல்ல சக்திவேலை பிடித்தது போலீஸ்.


சக்திவேல் அனைத்து குற்றங்களையும் ஒத்துகொள்ள நீராவிமுருகன் எங்கே என்று போலீசார் விசாரிக்க சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. நீராவி முருகன் தானாக காண்டாக்செய்தால் தான் உண்டு அவனுக்கு செல்போன் கிடையாது. அவனுக்கு ஒரு தொடர்பு ஒன்று உண்டு திருப்பதியை சேர்ந்த விபச்சார அழகியுடன் தொடர்பு ஏற்பட்டு அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தும் அவளுடனே சேர்ந்து வாழ்கிறான் என்று கூறியுள்ளான். 


நீராவி முருகனின் போனுக்காக போலீசார் காத்திருக்க சக்திவேல்செல்போனுக்கு நீராவி முருகன் பேசியுள்ளான். உடனடியாக அவனை சுற்றிவளைத்து பிடிக்க போலீஸ் துணை ஆணையர் சரவணன் ஆலோசனையின் பேரில் ஆய்வாளர் குமரன் தலைமையில் தனிப்படை அவனை தேடி சென்றது. 


 நீராவி முருகன் பிரத்யோகமாக வடிமைக்கப்பட்ட கத்தி வைத்திருப்பான். தான் திருட கிளம்பும் முன்னர் திருப்பதி , அல்லது திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இரண்டு மணி நேரம் வழிபட்டு ரூ.50 ஆயிரம் உண்டியலில் போட்டு விட்டுத்தான் கிளம்புவானாம். 
ஆகவே நீராவி முருகனை பிடிக்கும் போது போலீசாரை கொல்லவும் முயலக்கூடும் என்பதால் தேவைப்பட்டால் என் கவுண்டருக்கும் தயாராகவே போலீசார் சென்றுள்ளனர். 


குறிப்பிட்ட இடத்திற்கு வருவதாக சொன்ன நீராவிமுருகன் சக்திவேலுடன் போலீஸ் இருப்பதை அறிந்து உஷாராகி தப்பி ஓடவே போலீசார் துரத்த கீழே விழுந்ததில் அடிபட்டதில் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.


 நீராவி முருகனையும் , சக்திவேலையும் பிடித்த தனிப்படை ஆய்வாளர் குமரன் , எஸ்.ஐக்கள் விஜயன் , ஹரி ,ராஜ்மோகன் , ஹரிகுமார் ஆகியோருக்கு பாராட்டுமழை குவிகிறது. 


டெய்ல் பீஸ் : தான் திருடப் போகும் இடங்களில் அழகான இளம்பெண்கள் இருந்தால் அவர்களை சீரழிப்பது இவன் வழக்கமாம் , இதில் 3 புகார்கள் மட்டும் பதிவாகியுள்ளது. சிலர் ஏன் இந்த குப்பையை கிளர வேண்டும் என விட்டுவிட அதை தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளானாம் நீராவி முருகன்.