hindi beats tamil and english in highway milestones
வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் ஆங்கில மொழிக்குப் பதிலாக ஹிந்திமொழி எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வெளிமாநில வாகன ஓட்டுநர்களுக்கு புரியும் படி, ஆங்கிலத்திலும், ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று மூன்று மொழிகளில் காணப்பட்ட பெயர் பலகை மற்றும் மைல்கற்களில் தற்போது ஆங்கில மொழி வேகமாக நீக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக வாழும் வேலூர் மாவட்டத்தின் கிராமப் புறப்பகுதிகளில் தமிழே இல்லாமல் முழுக் முழுக்க ஹிந்தி எழுதப்பட்ட மைல்கற்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைல் கற்களில் ஹிந்தி மொழி இடம்பெறுவது மீண்டும் ஒரு இந்தி திணிப்பு முயற்சியாக இருக்கக் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
