எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தகுதி பட்டியலை ரத்து செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தகுதி பட்டியலை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், மாணவி விக்னயா வழக்கு தொடர்ந்திருந்தார்.

மருத்துவ தகுதி பட்டியலில் பிற மாநில மாணவர்களும் இடம் பெற்றுள்ளதால் தகுதி பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

தமிழக அரசு வெளியிட்ட தகுதி பட்டியலில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களுக்கு அதிக அளவில் உள்ளதாக மாணவி விக்னயா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மாணவி விக்னயா தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.