திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்):
பாபநாசம் அணை - 20, பாபநாசம் கீழ்அணை - 37, சேர்வலாறு அணை - 18, மணிமுத்தாறு அணை - 2, கடனாநதி அணை - 5, ராமநதி அணை - 5, கருப்பாநதி அணை - 11, குண்டாறு அணை - 5, அடவிநயினார் அணை - 8, நம்பியாறு அணை - 15, கொடுமுடியாறு அணை - 10,
கன்னடியன் அணைக்கட்டு - 10.8, பாளையங்கோட்டை - 6.2, திருநெல்வேலி - 3.3, சங்கரன்கோவில் - 5, சிவகிரி - 1, அம்பாசமுத்திரம் - 10.2, சேரன்மகாதேவி - 4, தென்காசி - 6.2, செங்கோட்டை - 3, ஆய்க்குடி - 1.2, ஆலங்குளம் - 12.4, ராதாபுரம் 11, நான்குனேரி - 10.3, களக்காடு - 5.4.
பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 540 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 43 கனஅடி, கடனாநதி அணைக்கு 137 கனஅடி, ராமநதி அணைக்கு 21 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 29 கனஅடி, வடக்குப்பச்சையாறு அணைக்கு 12 கனஅடி, நம்பியாறு அணைக்கு 4 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 16 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 31.20 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 16 அடி உயர்ந்து 53.84 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 35.00 அடி,
கடனாநதி அணையின் நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 46.00 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 39.00 அடி, கருப்பாநதி அணையின் 38.97 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 62.00 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்து 3.25 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 23.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.97 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்ம்டடம் 6.50 அடியாகவும் உயர்ந்துள்ளது.
2 நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
