விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முதலில் கருமேகம் சூழந்து காரிருளாய் ஆன பிறகு மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், பூமி குளிர்ந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது. புறநகர் மற்றும் நகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. 

rain in tamilnadu க்கான பட முடிவு

பகல் முழுவதும் வெயில் அடித்துவிட்டு மாலை வேளையில் சாரல் மழை பெய்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர். இதன்படி, சனிக்கிழமை மாலை தொடங்கிய மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. பின்னர், இரவு பெய்த மழை 7.30 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. 

rain in tamilnadu க்கான பட முடிவு

வாகன ஓட்டிகள் இதனால் சிரமம் அடைந்தாலும் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியதால் மகிழ்ச்சி தெரிவித்தனர். அருப்புக்கோட்டையில் மட்டும் சுமார் 10 மில்லி மீட்டர் மழைப் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.