Asianet News TamilAsianet News Tamil

இன்று 2 மாவட்டங்களில் கனமழை.. தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை.. வானிலை அப்டேட்

நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து  5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 

Heavy Rain in 2 districts - Weather Update
Author
Tamilnádu, First Published Aug 11, 2022, 2:38 PM IST

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

11.08.2022: வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.

12.08.2022. 13.08.2022: வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

14.08.2022. 15.08.2022: தயிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌
அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

11.08.2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்துய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.வடக்கு கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65
கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

12.08.2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌

13.08.2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்துய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, ஆந்திர கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌
வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌

14.08.2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.ஆந்துர கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

15.08.2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்துய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.ஆந்திர கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

11.08.2022. 12.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்தமிழக கடலோர பகுஇகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios